Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 164)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

ப்ரணம்ய ரங்கேச்வர பாதரக்ஷே தூரோபநீதை: உபதாவிசேஷை: ஸபாஜயந்தி ஸ்ம ததா ஸபாயம் உச்சைஸ்தராம் உத்தரகோஸலா: த்வாம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! நீ அயோத்தியில் ஸிம்ஹாஸனம் ஏறி கம்பீரமாக ஆட்சி செய்து சொண்டிருந்தாய். அப்போது வடக்கு கோசல நாட்டில் உள்ள மக்கள் பலரும் அயோத்தி வந்தனர். வெகுதூரத்தில் இருந்து வந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த உயர்ந்த காணிக்கைகளை உன்னிடம் சமர்ப்பித்து வணங்கி நின்றனர்.