Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 163)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
ப்ருத்வீபதீநாம் யுகபத் க்ரீடா: ப்ரத்யர்த்திநாம் ப்ராணிதும் அர்த்திநாம் ச ப்ராபு: ததா ராகவ பாதரக்ஷே த்வதீயம் ஆஸ்த்தாநிக பாதபீடம்
இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ அயோத்தி நாட்டின் ஸிம்ஹாஸனத்தில் விற்றிருந்தபோது உன்னை எதிர்க்க முயன்ற அரசர்கள் தோற்றனர். ஒரு சில அரசர்கள் உன்னை வணங்கி நின்றனர். இவ்வாறு உள்ள இருவகையான அரசர்களின் க்ரீடங்களும் ஒரே போன்று உனது ஆஸ்தானத்தை அடைந்தன.
ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து, கால்கள் வைக்கும் இடம் என்பது ஆஸ்தானம் எனப்படும். எதிர்த்துத் தோற்ற அரசர்களையும், “அவர்கள் அரசர்கள்” என்னும் மரியாதை அளித்து, அவர்களையும் மற்றவர்களைப் போன்றே நடத்திய விதம் வெளிப்படுவது காண்க. இந்தப் பண்பு மிகவும் முக்கியமானதாகும்.