Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 162)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

ராஜாஸநே ரகுகுலோத்வஹ பாதரக்ஷே நீராஜநம் ஸம்பவத் ஸம்யோசிதம் தே ச்லாகா வசேந பஹுச: பரிகூர்ணிதாபி: ஸாமந்த மௌளி மணி மங்கள தீபிகாபி:

ரகு குலத்தில் உதித்த இராமனின் பாதுகையே! உன்னைக் கொண்டாடுவதற்காக உனது ஸிம்ஹாஸனத்தைச் சுற்றி பல அரசர்கள் நின்றனர். அப்போது அவர்கள் க்ரீடங்களில் உள்ள இரத்தினக்கற்களின் ஒளியானது உன் மீது அசைந்தபடி காணப்பட்டது. இதனைக் காணும்போது உனக்கு மங்கல ஹாரத்தி எடுப்பது போன்று இருந்தது.

பாதுகை அயோத்தி நகரத்தை ஆட்சி செய்து வந்த நேர்த்தியைக் கண்டு பல அரசர்களும் மயங்கி நின்றனர். இதனை ஆமோதித்தபடி அவர்கள் தங்கள் தலைகளை அசைத்தனர். இதனால் அவர்களின் க்ரீடங்களில் பதிக்கப்பட்ட கற்களின் ஒளியானது பாதுகைக்கு ஹாரத்தி எடுப்பது போன்று காணப்பட்டது.