Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 161)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

ப்ராப்ய அதிகாரம் உசிதம் புவநஸ்ய குப்த்யை பத்ராஸநம் பரதவந்திதம் ஆச்ரயந்த்யா மத்யே அவதீர்ணம் இவ மாதவ பாதரக்ஷே மாத: த்வயாபி மநுவம்சமஹிபதீ நாம்

தாய் போன்ற பாதுகையே! இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு நீ இராமனால் நியமிக்கப்பட்டாய். பரதனால் ஆராதிக்கப்பட்டு ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தாய். உன்னை இவ்விதம் காணும்போது மநுகுலத்தில் உதித்த பேரரசி போன்று, அந்தக் குலத்திற்குப் பொருத்தமாகவே உள்ளாய்.

அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமல் வேறு யாரும் ஸிம்ஹாஸனத்தில் அமர இயலாது. ஆனால், பாதுகைக்கு இராமனின் தொடர்பு உள்ளது, பரதனின் ஆராதனை உள்ளது. ஆகவே இவள் அரியணையில் அமர்வது பொருத்தமே என்றார்.