Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 160)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
அந்த:புரே பரிஜநை: ஸமய உபயாதை: அபி அர்ச்சிதா பவஸி யா விநயோபபந்நை: ஸா கோஸலேச்வர பாதாவநி பூபதீநாம் ஸங்கட்டநம் மகுடபங்க்திபி: அந்வபூ: த்வம்
கோஸல தேசத்தின் ராஜாவாகிய இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ அந்தப்புரத்தில் உள்ள நேரங்களில், அங்கு உள்ள வேலையாட்களால் மிகவும் மரியாதையுடன் நடத்தப்படுகிறாய். ஸிம்ஹாஸனத்தில் வந்து அமர்ந்தவுடன், பல அரசர்களின் க்ரீடங்கள் உன் மீது இடித்தபடி (தலைசாய்த்தபடி) நிற்க, நீ கம்பீரமாக வீற்றுள்ளாய்.
பாதுகையிடம் உள்ள மரியாதை மற்றும் பயம் காரணமாகப் பல அரசர்களும் மிகவும் வேகமாக ஓடி வந்து, மென்மையாகப் பாதுகையில் விழுவதற்குப் பதிலாக, வேகமாக வந்து விழுகின்றனரே! பாதுகைக்குத் துன்பம் ஏற்படப் போகிறதே என்று வருத்தம் கொள்கிறார்.