Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 158)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
யத்ர க்வசித் விஹரத: அபி பதாரவிந்தம் ரக்ஷ்யம் மயா ரகுபதே: இதி பாவயந்த்யா நிச்ஷேமேவ ஸஹஸா மணிபாதரக்ஷே நிஷ்கண்டகம் ஜகதிதம் விததே பவத்யா
இரத்தின கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! “இராமன் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தாலும் அவனது திருவடிகளைக் காக்கும் பொறுப்பு என்னுடையது”, என்று நீ எண்ணுகிறாய் போலும். அதனால்தான் இந்த உலகம் முழுவதும் விரோதிகள் இல்லாமல் உள்ளனர்.