Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 157)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
காகுத்ஸ்த்த பாத விரஹ ப்ரதிபந்ந மௌநாம் நிஷ்ப்பந்ததாம் உபகதாம் மணிபாதரக்ஷே ஆச்வாஸயந் இவ முஹு: பரதஸ் ததாநீம் சீதை: அவீஜயத் சாமரமாருதை: த்வாம்
இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இராமனின் பிரிவைத் தாங்க இயலாமல் நீ மிகவும் சோகம் அடைந்தாய் போலும். அதனால்தான் அசையாமல், மௌனமாக நீ அமர்ந்தாய் போலும். இப்படியாக உள்ள உன்னைச் சமாதானம் செய்யும் பொருட்டு, பரதன் சாமரம் கொண்டு அடிக்கடி குளிர்ந்த காற்றை வீசியபடி இருந்தான்.
இராமனி விட்டுப் பிரிந்த சோகத்தைப் பாதுகையால் தாங்க இயலவில்லை. எனவே அடிக்கடி மூர்ச்சையாகி நின்றாள். அப்போது பரதன் சாமரம் கொண்டு குளிர்ந்த காற்று வீசி, மூர்ச்சையைத் தெளிய வைத்தபடி இருந்தான்.