Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 156)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
வீர வ்ரத ப்ரணயிநி ப்ரதமே ரகூணாம் ப்ராப்தே சிராய பரதே வ்ரதம் ஆஸிதாரம் த்யக்த்வா பதாவநி ததா விவிதாந் விஹாராந் ஏகாஸிகா வ்ரதம் அபூர்வம் அவர்த்தய: த்வம்
பாதுகையே! இராமன் தனது தந்தையின் வாக்கைக் காப்பாற்றவும், உலகைக் காப்பதற்காக அசுரர்களை அழிக்கவும் சபதம் மேற்கொண்டான். இவற்றை முடிக்கும்வரை அயோத்தி திரும்புவதில்லை என்ற விரதம் பூண்டான். அனைத்து விஷயங்களும் அருகில் உள்ளபோதும், அவற்றை அனுபவிக்கப் போவதில்லை என்று பரதன் விரதம் பூண்டான். நீ செய்தது என்ன - இராமனின் திருவடிகள் மீது மிகவும் ப்ரியம் உள்ள நீ, அவற்றைத் துறந்து, ஒரே இடத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுதல் என்ற விரதம் பூண்டாய்.
இங்கு இராமன் பூண்ட விரதமும், பரதன் பூண்ட விரதமும் எப்படிப்பட்டது என்றால் - தங்களுக்குப் ப்ரியமான எதனையும் இழக்காமலேயே பூண்ட விரதமாகும். ஆனால் பாதுகையின் விரதம் அப்படிப்பட்டது அல்ல. தனக்கு மிகவும் விருப்பமான திருவடிகளை விட்டுப் பிரிந்த பின்னரே, பாதுகை அயோத்திக்கு வந்தாள். ஆக இவளது விரதம் அல்லவோ மேலானது?