Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 155)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

ப்ராயேண ராம விரஹ வ்யதிதா ததாநீம் உத்ஸங்கம் ஆச்ரிதவதீ தவ ராஜ்யலக்ஷ்மீ: தாம் ஏவ தேவி நநு ஜீவயிதும் ஜலார்த்ராம் அங்கீசகார பவதீ பரதோபநீதாம்

தாயே! பாதுகாதேவீ ! இராமன் கானகம் புறப்பட்டவுடன் அயோத்தி என்ற ராஜ்யலக்ஷ்மி மயக்கம் அடைந்து சாய்ந்தாள். அவள் உன் மடி மீது வந்து சேர்ந்தாள். அப்போது பரதன் உனக்கு வீசிய விசிறியின் ஈரம் மூலமாகவே ராஜ்யலக்ஷ்மியின் மயக்கம் தெளிய வைத்தாய் அன்றோ?

உன்னைச் சரணம் புகுந்த ராஜ்யலக்ஷ்மியை நீ காக்க எண்ணினாய். இதனால்தான் நீ, பரதனின் விசிறியை ஏற்க முன்வந்தாய் அல்லவா? “பரதனின் விசிறியை ஏற்க முன்வந்தாய்” - என்பதன் கருத்து என்ன? பொதுவாக மன்னர்களுக்கு விசிறி வீசுவது வழக்கமாகும். இங்கு பாதுகை அரியணையில் அரசியாக அமர முன்வந்தாள் என்பதை இவ்விதம் சூசகமாகக் கூறுகிறார்.