Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 154)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

விச்வம் த்வத் ஆச்ரித பதாம்புஜ ஸம்பவாயாம் யஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம் இதம் மணிபாதரக்ஷே ஆஸீத் அநந்ய சரணா ஸமயே யதாவத் ஸ அபி த்வயா வஸுமதீ விஹித ப்ரதிஷ்ட்டா

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இந்தப் ப்ரபஞ்சம் மிகவும் பெரியது. ஆயினும் இது, இப்போது உன்னால் காக்கப்படும் திருவடிகளில் இருந்து தோன்றிய பூமியில், பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டது. ஏன் ? இராமன் கானகம் சென்றபோது உன்னைத் தவிர காக்க ஆளில்லாமல் நின்ற பூமியை நீ காப்பாற்றி வந்தாய். அதனால் அல்லவோ ப்ரபஞ்சமானது இந்தப் பூமியில் அடைக்கலமாக வைக்கப்பட்டது?

ப்ரபஞ்சத்தில் ஒரு பகுதியாக உள்ள பூமியை நாடி, ப்ரபஞ்சமே வந்தது என்றார். இதன் காரணம் பாதுகையின் பாதுகாப்பு இங்கு மட்டுமே உள்ளது என்பதால் ஆகும்.