Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 153)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
வர்ஷாணி தாநி வ்ருஷளோ ந தபாம்ஸி தேபே பாலோ ந கச்சித் அபி ம்ருத்யுவசம் ஜகாம ராஜ்யே தவ அம்ப ரகுபுங்கவ பாதரக்ஷே ந ஏவ அபரம் ப்ரதி விதேயம் அபூத் ப்ரஸக்தம்
இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாப்பவளே! நீ அயோத்தியை ஆண்ட போது - மற்ற வர்ணத்தினர்கள் யாரும் தவம் இயற்றவில்லை (அந்தணன் தவிர); எந்தக் குழந்தையும் இறந்து போகவில்லை; ப்ராயச்சித்தம் தேடும் அளவிற்கு எந்தவிதமான குற்றமும் நிகழவில்லை.
பாதுகையின் ஆட்சியில் எந்தவிதமான குற்றங்களோ அல்லது தோஷங்களோ அயோத்தியைத் தீண்டவில்லை என்றார். மக்கள் நிறைவாக இருந்தால், நாட்டில் குற்றங்கள் குறைவது இயல்பே ஆகும். இந்த நிலை பாதுகைகள் நாட்டை ஆண்டபோது காணப்பட்டதாகக் கூறுகிறார்.