Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 152)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

ராஜ்யம் ததா தசரதாத் அநு ராமத: ப்ராக் பிப்ராணயா சரணரக்ஷிணி வீதகேதம் துல்யாதிகார பஜநேந பபூவ தந்ய: வம்ச: த்வயா அம்ப மநுவம்ச மஹீபதிநாம்

சரணம் என்று புகுந்தவர்கள் அடையும் இடமான திருவடிகளைக் காப்பவளே! தாயே! பாதுகையே! தசரதனுக்கு பின்னால் இராமன் ஸிம்ஹாஸனம் அமரவில்லையே என்ற வருத்தத்தை நீ போக்கினாய். அந்த ஸிம்ஹாஸனத்தை இராமனுக்கு முன்பாக நீ அலங்கரித்தாய். இராமனுக்குப் பின் வந்த மனுகுலத்து அரசர்கள் அனைவரும், நீ அமர்ந்து ஆண்ட ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்ததால் மிகவும் பெருமை பெற்றனர்.

இங்கு பாதுகையால் இக்ஷ்வாகு குலத்தின் ஸிம்ஹாஸனத்திற்குப் பெருமை உண்டானது என்றார். இக்ஷ்வாகு குலத்தில் உதித்த இராமனால் அந்த குலத்திற்குப் பெருமை, இராமனின் பாதுகைகளால் அந்த ஸிம்ஹாஸனத்திற்குப் பெருமை, இக்ஷ்வாகு குலதனமான ஸ்ரீரங்கநாதனுக்கு இராமனால் ஆராதிக்கப்பட்டவன் என்பதால் பெருமை - ஆக, இப்படியாக இராமனாலேயே இக்ஷ்வாகு குலத்திற்குப் பல பெருமைகள் உண்டாயின. அந்த இராமனின் ஸிம்ஹாஸனத்தின் மூலம், பின்னே வந்த அரசர்களுக்குப் பெருமை ஏற்பட்டது.