Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 151)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
ப்ராது: யதம்ப வரஹாத் பரதே விஷண்ணே தாக்ஷிண்யம் ஆச்ரிதவதீ மணிபாதுகே த்வம் ஆஸீத் அசேஷ ஜகதாம் ச்ரவண அம்ருதம் தத் வாசால காஹளஸஹம் பிருதம் ததா தே
இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! தாயே! தனது தமையனான் இராமனின் பிரிவு காரணமாகப் பரதன் மிகவும் துயரம் கொண்டான். அவனுக்காக நீ மீண்டும் அயோத்தி வந்தாய். இவ்விதம் வந்த நீ ஸிம்ஹாஸனம் ஏற்றாய். அப்போது எக்காளம் போன்ற வாத்தியங்கள் முழங்கின. இவை உலகினர் அனைவருக்கும், அவர்கள் காதுகளுக்கு இன்பம் அளிப்பதாகவும், உனது புகழைப் பறை சாற்றுவதாகவும் அமைந்தன.
பரதனுக்காகவே பாதுகைகள் அயோத்திக்கு வந்ததாகக் கூறுகிறார். இந்த வரவைக் கொண்டாடும் பொருட்டு, சக்ரவர்த்திகளுக்கு அளிக்கும் மரியாதைகளான எக்காளம் முழங்குதல் முதலானவை காணப்பட்டதாகக் கூறுகிறார்.