Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 150)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

ப்ராப்தே திவம் தசரதே பரதே விலக்ஷே பர்யாகுலேஷு ப்ருசம் உத்தர கோஸலேஷு த்வம் சேத் உபேக்ஷிதவதீ க இவ அபவிஷ்யத் கோபாயிதும் குசகஸ்ய விபோ: பதம் தத்

தசரதன் ஸ்வர்க்கலோகம் அடைந்தார். அவர் உயிர் நீங்க, தானே காரணம் என்று வெட்கப்பட்ட பரதன், ஸிம்ஹாஸனம் ஏற்காமல் இருந்தான். இதனைக் கண்ட அயோத்தி மக்கள் அனைவரும் கலங்கி நின்றனர். அப்போது நீயும் ஸிம்ஹாஸனத்தில் அமராமல் இருந்திருந்தால், குகனின் நண்பனான இராமனின் ஸிம்ஹாஸனத்தை அலங்கரித்து, அயோத்தியை யார்தான் காப்பாற்ற இயலும்?

இங்கு பாதுகையின் பெருந்தன்மை வெளிப்படுகிறது. பரதன் தனது வெட்கம் என்னும் சுயநலம் கருதி நாட்டைக் கைவிட்டான். ஆனால் பாதுகையோ, இராமனைப் பிரிவது மிகவும் கடினமான செயலாக இருந்தபோதிலும், நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு, தனது சுயநலத்த எண்ணாமல், அயோத்திக்கு வந்தாள்.