Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 149)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
மாந்யே ரகூத்வஹபதே மணி த்வாம் விந்யஸ்ய விக்ரஹவதீம் இவ ராஜ்ய லக்ஷ்மீம் ஆலோலம் அக்ஷவலயீ பரத: ஜடாவாந் ஆலம்ப்ய சாமரம் அநந்ய மநா: ஸிஷேவே
மாணிக்கக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமானின் இடத்தில் உன்னைப் பரதன் அமர வைத்தான். இதனைக் காணும்போது, ராஜ்யலக்ஷ்மியே உருவம் எடுத்து ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்தது போன்று நீ காணப்பட்டாய். அந்த நேரத்தில் தலையில் ஜடாமுடியும், கையில் ஜப மாலையும் உள்ள பரதன், தனது மனதை வேறு எங்கும் செலுத்தாதபடி, உன்னைத் த்யானித்தபடி சாமரம் வீசினான்.
இராமன் பூண்ட தவக்கோலத்தைப் பரதனும் உடனேயே கொண்டான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.