Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 148)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

பாதாவநி ப்ரசல சாமரப்ருந்த மத்யே பத்ராஸந ஆஸ்தர கதா பவதீ விரேஜே ஆகீர்ண திவ்ய ஸலிலே கடகே ஸுமேரோ: அம்போஜிநீவ கலஹாயித ஹம்ஸயூதா

எம்பெருமானின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! அசைந்து கொண்டுள்ள சாமரங்களின் நடுவில் ஸிம்ஹாஸனம் உள்ளது. அதன் மீது இருந்த மெத்தையில் நீ அமர்ந்துள்ளாய். இதனைக் காணும்போது எவ்விதம் இருந்தது என்றால் - தங்கமயமாக உள்ள மேரு மலையின் அடிவாரத்தில் உள்ள குளத்தில், தாமரை மலர்கள் அசைந்தபடி உள்ளன; அவற்றின் மீது உள்ள அன்னங்கள் சண்டையிடுவதைப் போன்று இருந்தது.

இங்கு மேருமலையை ஸிம்ஹாஸனம் என்றும், குளத்தின் நீர்ப்பரப்பு என்பதை மெத்தை என்றும், தாமரை என்பதைப் பாதுகை என்றும், அன்னம் என்பதை பாதுகைக்கு வீசப்படும் சாமரங்கள் என்றும் கொண்டார்.