Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 147)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
பௌலஸ்த்ய வீர வதந ஸ்தபகாவஸாநாத் புஷ்பாணி தண்டகவநேஷு அபசேதும் இச்சோ: ரக்ஷாதுரம் த்ருதவதீ மணிபாதுகே த்வம் ராமஸ்ய மைதில ஸுதா ஸஹிதே ப்ரசாரே
இரத்தினக்கற்கள் கொண்ட பாதுகையே! இராவணனின் தலைகள் என்ற மலர்களைப் பறிக்க இராமன் எண்ணினான். இதனால் அல்லவா அவன் சீதையுடன் தண்டகாரண்யம் புகுந்து, அங்கிருந்த மலர்களைக் கொய்தபடி இருந்தான்? அந்த நேரத்தில் நீ பூமியின் பாரத்தைச் சுமக்கும் வகையில் ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தாய். இதனால்தான் இராமன் கவலை இன்றி கானகத்தில் ஸஞ்சாரம் செய்தான்.
மலரைக் கொய்வதற்கு எந்தவிதமான பெரும் முயற்சியும் அவசியம் இல்லை, மிகவும் எளிதாகவே கொய்யலாம். இங்கு இராமன் இராவணனின் தலைகளை அது போன்று எளிதாகக் கொய்ய எண்ணினான் என்று கூறுவதன் மூலம் - இராமனின் வலிமையை உணர்த்தினார். இராமன் தனது நாட்டுப் பொறுப்புகளை பாதுகையிடம் ஒப்படைத்ததால், எந்தவிதமான கவலையும் இன்றி இருந்தான். இராமனுக்கு இப்படி என்றால், நாமும் நமது சுமைகள் பாதுகையிடம் ஒப்படைக்கலாம் அல்லவோ