Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 146)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
ராம ஆஜ்ஞயா பரவதீ பரிக்ருஹ்ய ராஜ்யம் ரத்நாஸநம் ரகுகுல உசிதம் ஆச்ரயந்தீ சுத்தாம் பதாவநி புந: பவதீ விதேநே ஸ்வாதந்த்ர்யலேச கலுஷாம் பரதஸ்ய கீர்த்திம்
எம்பெருமானின் திருவடிகளைக் காப்பவளே! பாதுகையே! இராமனின் ஆணையை ஏற்றுக் கொண்ட நீ, ரகுவம்சத்திற்கு மட்டுமே உரித்தான ஸிம்ஹாஸனத்தை அடைந்து, பட்டத்தை ஏற்றுக் கொண்டாய். இராமனின் சொல்லையும் சமாதானங்களையும் கேட்காமல் இருந்த பரதன் சற்று கலக்கம் அடைந்திருந்தான். அந்தக் கலக்கம் நீங்கும்படியாகவும், கீர்த்தி பெறும்படியாகவும் நீ செய்தாய்.
இராமனின் ஆணையை பரதன் மீறினான், பரதன் தன் விருப்பப்படி ஸ்வதந்திரமானவனாக செயல்பட்டான் என்ற பழிச்சொல் பரதனுக்கு வராமல், புகழை வந்து சேரும்படியாகப் பாதுகை செய்தாள்.