Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 145)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
ராமப்ரயாண ஜநிதம் வ்யபநீய சோகம் ரத்நாஸநே ஸ்திதவதீ மணிபாதரக்ஷே ப்ருத்வீம் நிஜேந யசஸா விஹித உத்தரீயாம் ஏகாதபத்ர திலகாம் பவதீ விதேநே
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! நீ இராமனை விட்டுப் பிரிந்து வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டாய். ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து இராமனைப் பிரிந்த உலகின் துக்கத்தை நீக்கினாய் . உனது கீர்த்தி என்பதையே பூமிக்கு உடையாக உடுத்தி விட்டாய். உனது ஆட்சி என்ற வெண்கொற்றக் குடையை, நெற்றியில் பொட்டு போன்று பூமியை இட்டுக் கொள்ளச் செய்தாய்.
இங்கு இராமனைப் பிரிந்த துன்பம் தாங்காமல் அயோத்தி மண்ணானது வருந்துவதைக் கூறுகிறார். பூமியாகிய இவள் அந்தத் துன்பம் தாளாமல் சரியாக ஆடை உடுத்துவதில்லை, நெற்றியில் பொட்டும் வைத்துக் கொள்வதில்லை. பாதுகையும் இராமனைப் பிரிய நேரிட்டபோது, இதே துன்பங்களை அடைந்தாள். ஆயினும் தனது துயரத்தை மறைத்துக் கொண்டு அயோத்திக்கு உதவினாள்.