Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 144)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

போகாந் அநந்ய மநஸாம் மணிபாதுகே த்வம் புஷ்ணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்கஸித்தாந் தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜ்ஜநீயம்

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னை விட்டு வேறு எங்கும் தங்கள் மனதைத் திருப்பாமல், உன்னை மட்டுமே த்யானிப்பவர்களுக்கு நீ செய்வது - அவர்கள் கேட்காமலேயே பல நன்மைகளை ஏற்படுத்துகிறாய். என்ன வியப்பு இது! இதனால்தான் மிகவும் உத்தமனான பரதனுக்கு அவன் கேட்காமலேயே, உலகைக் காப்பாற்றும் ராஜ்யப் பொறுப்பு வந்து சேர்ந்தது அல்லவா?

எந்தப் பலனையும் எதிர்பாராமல் பாதுகையைத் த்யானித்தபடி உள்ளவர்கள் மிகவும் உயர்ந்த பலனை, அவர்கள் கேட்காமலேயே அடைந்துவிடுகின்றனர். இதற்கு ஏதேனும் சான்று உண்டா? உண்டு, பரதன் விஷயத்திலேயே இது நடந்தது என்றார்.