Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 143)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

ஸாம்ராஜ்ய ஸம்பதிவ தாஸஜநோசிதா த்வம் ராமேண ஸத்யவசஸா பரதாய தத்தா ஸ த்வாம் நிவேச்ய சரணாவநி பத்ரபீடே ப்ருத்வீம் புபோஜ புபுஜே ச யச: விபூதிம்

எம்பெருமானின் திருவடிகளை காப்பாற்றும் பாதுகையே! ஸத்ய வாக்கு கொண்டவனாகிய இராமனால், அடியார்களுக்கு அளிக்கப்படத் தகுந்தவளாகிய நீ, ராஜ்யலக்ஷ்மியாகப் பரதனிடம் அளிக்கப்பட்டாய். இப்படியாக வந்த உன்னைப் பரதன் உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் எழுந்தருளச் செய்தான். இதன் மூலம் இந்த உலகைக் காத்தான். இதனால் ஒப்பற்ற புகழ் பெற்றான்.

இங்கு பரதன் புகழ் பெற்றான் என்று கூறுவதன் கருத்து என்ன? பாதுகையை இராமனிடம் பெற்று, அவளை அரியணையில் பரதன் அமர்த்தவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் - இராமனின் அரியணையைப் பரதன் அபகரித்தான் என்னும் பழி அல்லவா வந்திருக்கும்? ஆனால் பாதுகையை அரியணையில் எழுந்தருளச் செய்ததால், இங்கு புகழ் அல்லவா கிட்டியது!