Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 142)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
மோசித ஸ்திர சராந் அயத்நத: கோஸலாந் ஜநபதாந் உபாஸ்மஹே யேஷு காம்ச்சந பபூவ வத்ஸராந் தைவதம் தநுஜ வைரிபாதுகா
இந்தக் கோசல நாட்டில், அசுரர்களின் சத்ருவான இராமனின் பாதுகைகள் ஆராதிக்கப்பட்டு ஆட்சி செய்து வந்தன. அப்போது அந்த நாட்டில் உள்ள பலரும் மிகவும் எளிதாக, எந்த விதமான யோகங்களும் பெறாமல், ஸம்ஸாரத்தைக் கடந்து மோக்ஷம் பெற்றனர். அப்படிப்பட்ட கோசல நாட்டைத் த்யானிப்போமாக.
பாதுகைகள் நாட்டை ஆட்சி செய்தபோது, அந்த நாட்டில் வாழ்ந்தவர்கள் எவ்வித மோக்ஷ உபாயங்களும் இன்றி, மோக்ஷம் கைகூடப் பெற்றனர். இப்படிப்பட்ட அந்தப் புண்ணிய பூமியான கோசல நாட்டை வணங்குவோம் என்றார்.