Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 141)
Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி
அபீஷ்டே பாதுகா ஸா மே யஸ்யாஸ் ஸாகேதவாஸிபி: அந்வய வ்யதிரேகாப்யாம் அந்வயமீயத வைபவம்
பாதுகை இல்லாதபோதும், அவள் உள்ள போதும் எப்படிப்பட்ட தாழ்வுகளும், பெருமைகளும் ஏற்படுகிறது என்பதை அயோத்தி மக்கள் அறிந்து கொண்டனர். இப்படிப்பட்ட பாதுகை எனக்கு எஜமானியாக உள்ளாள்.
அந்வயம் என்பது மழைக்குப் பின்னர் பயிர் விளையும் என்பது போன்றதாகும். வ்யதிரேகம் என்பது மழை இல்லையானால் பயிர் இல்லை என்பதாகும். இது போன்று பாதுகை இருந்ததால் பரதன் ராஜ்ஜியம் ஆண்டான்; பாதுகை இல்லாத காரணத்தினால் இராமனுக்கு ராஜ்யம் கிட்டவில்லை, கானகத்தில் இருந்தான்