Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 140)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
ஸமுபஸ்திதே ப்ரதோஷே ஸஹஸா விநிவ்ருத்ய சித்ரகூட வநாத் அபஜத புந: ஜநபதம் வத்ஸம் தேநு: இவ பாதுகே பவதீ
பாதுகையே! மேய்வதற்காகச் செல்லும் பசுவானது அஸ்தமன நேரத்தில் கன்றுக்குட்டியிடம் வந்து விடுகிறது. அது போன்று நாட்டிற்கும் பரதனுக்கும் கவலை ஏற்பட்டபோது, நீ சித்திரகூடத்தில் இருந்து மிகவும் விரைவாக கோசலத்திற்குத் திரும்பினாய் போலும்.
தாய்ப்பசுவானது மேய்ச்சலுக்குக் கிளம்பிச் சென்று, சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில், கன்றின் ஞாபகம் உண்டாகிவிட, விரைவாக கன்றிடம் ஓடிவரும். இது போன்று பாதுகைக்கு அயோத்தியின் நினைவு வந்தது போலும். ஆகையால் மிகவும் விரைவாக அயோத்திக்கு ஓடிவந்தாள்.