Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 139)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
கைகேயீ வரதாந துர்த்திந நிராலோகஸ்ய லோகஸ்ய யத் த்ராணார்த்தம் பரதேந பவ்யமநஸா ஸாகேதம் அநீயத ராம த்யாக ஸஹைரஸஹ்ய விரஹம் ரங்கக்ஷிதீந்த்ரஸ்ய தத் பாதத்ராணாம் அநந்ய தந்த்ர பணி தே: ஆபீடம் இடீமஹி
எந்த ஒரு பாதுகையானது - தசரதன் கைகேயிக்கு வரம் கொடுத்த நாளன்று துக்கம் என்ற இருள் மூடிய உலகுக்காக, நல்ல மனம் படைத்த பரதனால் மீண்டும் அயோத்திக்கு அழைத்து வரபபட்டதோ; இராமனைப் பிரிய நேரிட்டாலும் சகித்துக் கொண்ட மக்களால், இதன் பிரிவைத் தாங்க இயலாமல் உள்ளனவோ; யாராலும் இயற்றப்படாமல் உள்ள வேதங்களின் தலைக்கு மகுடம் போன்று உள்ளதும் ஆகிய - ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றியபடி இருக்கும் பாதுகையை நாங்கள் துதிக்கிறோம்.
இங்கு பாதுகையின் பலவிதமான மேன்மையைப் பட்டியல் இடுகிறார். இராமனின் பிரிவைத் தாங்க முடிந்த அயோத்தி மக்களால், பாதுகையின் பிரிவைத் தாங்க இயலவில்லை என்னும் இந்தக் கருத்தை சற்றே மாற்றி - அயோத்தி மக்களைப் பிரிந்து இராமனால் இருக்க முடிந்தது, ஆனால் பாதுகையால் இருக்க முடியவில்லை - என்று கொள்ளலாம் - இதன் மூலம் பாதுகையின் வாத்ஸல்யத்தை உணரலாம்.