Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 138)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
தசக்ரீவ ஸ்தம்பேரம தளந துர்த்தாந்த ஹ்ருதயே விஹார ஸ்வாச்சந்த்யாத் விசதி ரகுஸிஹ்மே வநபுவம் ஸ்வ வாத்ஸல்ய க்ரோடீக்ருத பரத சாபேவ பவதீ நிராபாதம் பாதாவநி ந விஜஹௌ கோஸல குஹாம்.
இராவணன் என்ற யானையை அழிப்பதில் வேகம் கொண்ட சிங்கமாக இராமன் அடர்ந்த கானகத்தில் புகுந்தான். நீ செய்தது என்ன? பரதன் என்ற குட்டி மீது உள்ள வாத்ஸல்யம் காரணமாக, நீ அந்தக் குட்டியுடன் கோசல நாடு என்னும் குகைக்குத் திரும்பிவிட்டாய்.
ஆண் சிங்கமாகிய இராமன் வெளியே கிளம்பியவுடன், பெண் சிங்கமாகிய பாதுகை செய்தது என்ன? தனது குட்டிச் சிங்கமான பரதனைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு, அயோத்தி என்ற தனது குகைக்குள் புகுந்தாள்.