Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 137)

Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி

ஆஸ்த்தாய தத்ர ஸ்புட பிந்து நாதம் ஸ்தம்பேரமம் தாத்ருச ஸந்நிவேசம் அதசயஸ் த்வம் புரமத்யபாகே பாதாவநி த்வத் ப்ரணவாச்ரயத்வம்

எம்பெருமானின் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே! நீ கம்பீரமாக யானை மீது அமர்ந்து அயோத்தியின் நடுவில் வந்து நின்றாய். அந்த யானை எப்படி இருந்தது - பிந்து என்ற புள்ளிகள் மிகவும் நேர்த்தியாகவும், ஸ்வரம் போன்று இனிய பிளிறுதலை உடையதுமாக இருந்தது. இவ்விதமாக நீ ப்ரணவாகார விமானத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாய்.

ப்ரணவாகாரம் என்பது ஸ்ரீரங்கம் கோவில் விமானம் ஆகும். அதனைப் போன்று இங்கு யானை விளங்கிற்று. அதில் கம்பீரமாகப் பாதுகை வீற்றிருந்தாள். அங்கு ப்ரணவாகாரம் போன்ற யானையில் வீற்றிருந்தாள், இங்கு (திருவரங்கத்தில்) ப்ரணவாகாரத்தின் உள்ளே கண்வளரும் அழகியமணவாளனின் திருவடிகளில் வீற்றிருக்கிறாள்.