Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 136)

Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி

த்ரஷ்டும் ததா ராகவ பாதரக்ஷே ஸீதாம் இவ த்வாம் விநிவர்த்தமாநாம் ஆஸந் அயோத்யாபுர ஸுந்தரீணாம் ஔத்ஸுக்ய லோலாநி விலோசநாநி

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ மீண்டும் அயோத்திக்கு வந்தபோது அங்கிருந்த பெண்களுக்குச் சீதையைப் போன்றே தோன்றினாய். உன்னை இவ்விதம் காண்பதற்கு அந்தப் பெண்களின் கண்கள் ஆசை கொண்டு, அங்கும் இங்கும் அசைந்தன.

உத்தமமான பெண்கள் வீதி வழியாகச் செல்லும்போது அவர்களைக் காண்பதற்கு அனைத்துப் பெண்களும் போட்டியிடுவது இயல்பே ஆகும். இங்கு பாதுகாதேவி அல்லவோ செல்கிறாள்? சீதையைக் காட்டிலும் உயர்ந்தவள் ஆயிற்றே! ஆக இவளைக் காண்பதற்குப் பெண்கள் கூடி நின்றதில் வியப்பில்லை.