Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 135)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
ப்ரைக்ஷந்த வக்த்ரை: மணிபாதரக்ஷே சத்ருஞ்ஜயம் சைலம் இவ அதிரூடாம் ராமாபிதாந ப்ரதிபந்ந ஹர்ஷை: உத்தாநிதை: உத்தரகோஸலா: த்வாம்
இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! சத்ருஞ்ஜயம் என்று அழைக்கப்பட்ட மலை போன்ற யானை மீது அமர்ந்து வந்த உன்னை, வடக்குக் கோஸல தேசத்தில் உள்ளவர்கள் இராமன் என்றே பார்த்தனர். மிகுந்த மகிழ்வுடன் தங்கள் தலை நிமிர்த்தி உன்னைக் கண்டனர்.
மலை போன்ற யானை மீது அமர்ந்து நீ வந்தாய். இப்படி வந்த உன்னைக் கோஸல தேசத்தில் இருந்த அனைவரும் நோக்கினார்கள். அவர்கள் உன்னை இராமனாகவே கண்டனர். அவர்கள் முகம் இராமனைக் கண்டது போன்றே மகிழ்ந்து காணப்பட்டது.