Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 134)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
சத்ர இந்து மண்டலவதீ மணிபாதுகே த்வம் வ்யாதூத சாமர கலாப சரப்ரஸூநா ஸத்ய: பபூவித ஸம்க்ர விகாஸஹேது: ஸாகேத பௌரவநிதா நயந உத்பலாநாம்
இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! வெண்குடைகள் என்னும் சந்த்ர மண்டலம் உடையவளும், வரிசையாக வீசப்படும் சாமரம் என்னும் நாணல் மலர்களை உடையவளும் ஆக நீ அயோத்திக்கு வந்தாய். இப்படியாக நீ அங்கிருந்த பெண்களின் நெய்தல் மலர் போன்ற கண்கள் மகிழ்வதற்குக் காரணமானாய்.
அயோத்தி நகரத்திற்கு வந்தபோது உனக்குப் பிடிக்கப்பட்டிருந்த வெண்மையான குடைகளைக் கண்டால் சந்திரன் போன்று இருந்தன. உனக்கு வீசப்பட்ட சாமரங்கள் அனைத்தும் நாணல் மலர்கள் போன்று இருந்தன. நீ சரத் காலம் போன்று காணப்பட்டாய். இப்படியாக நீ வந்தபோது - உன்னைக் கண்ட அயோத்தியில் இருந்த பெண்களின் கண்கள், கருநெய்தல் மலர்கள் போன்று மலர்ந்தன..