Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 133)

Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி

ஸாகேதஸீம்நி பவதீ மணிபாதரக்ஷே மாங்கல்ய லாஜநிகரை: அவகீர்யமாணா: கீர்த்தி ஸ்வயம் வரபதே: பரதஸ்ய காலே வைவாஹிகீ ஜநநி வஹ்நி சிகேவ ரேஜே

எங்கள் தாய் போன்ற பாதுகையே! நீ பரதனுடன் அயோத்திக்குள் வந்தாய். அப்போது அங்கிருந்த பெண்கள், மங்களத்தின் அடையாளமாக பொரியை வாரி உன் மீது இரைத்தனர். அவை உன் மீது விழுந்தவுடன், உன்னில் பதிக்கப்பட்டுள்ள இரத்தினக்கற்கள் காரணமாக அக்னி போன்று தோன்றின. இதனைக் காண்பதற்கு எவ்விதம் இருந்தது - கீர்த்தி என்ற பெண் தனது கணவனான பரதனுடன் வந்தது போன்று இருந்தது.

லாஜஹோமம் என்றால் பொரியைத் தூவி நிகழ்த்துவதாகும். பரதனுடன் பாதுகை மட்டும் வரவில்லை; பாதுகை வந்த காரணத்தால் பரதனுடன் கீர்த்தியும் சேர்ந்தே நாட்டிற்குள் வந்ததாகக் கருத்து.