Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 132)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
மாத: த்வத் ஆகமந மங்கள தர்சநீநாம் ஸாகேதபக்ஷ்மளத்ருசாம் சடுல அக்ஷி ப்ருங்கை: ஜாதாநி தத்ர ஸஹஸா மணிபாதரக்ஷே வாதாய நாநி வதநை: சதபத்ரிதாநி
இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! அயோத்தி நகரத்திற்குள் வருகை தந்த உனது வரவைத் திருமணம் போன்று, மங்களகரமான நிகழ்வாகவே கண்டார்கள். யார்? அந்த நகரத்தின் பெண்கள், தங்கள் மாளிகைகளின் ஜன்னல்கள் வழியே கண்டனர். அவர்கள் முகம் உன்னைக் கண்டதும் மலர்ந்தன. இதனைக் காண்பதற்கு - எவ்வாறு இருந்தது என்றால், ஜன்னல் தோறும் தாமரை பூத்தது போன்று இருந்தன. அவர்களது கண்கள், அந்த மலர்களின் மொய்க்கும் வண்டுகள் போன்று விளங்கின.
பாதுகைகள் வருவதை அந்த நகரத்தின் பெண்கள் தங்களது மாளிகைகயின் ஜன்னல்கள் வழியே பார்த்தனர். அவர்களது முகம் தாமரை போன்று மலர்ந்தன. அந்த முகத்தில் உள்ள அவர்களது கண்கள், முகமாகிய தாமரையை மொய்க்கும் வண்டுகள் போன்று காணப்பட்டன. இப்படியாக ஒவ்வொரு மாளிகையின் ஜன்னல்களிலும் தாமரை மலர்ந்தது போன்று இருந்தது.