Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 131)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
அந்தே வஸந் அசரமஸ்ய கவே: ஸ யோகீ வந்யாந் ப்ரக்ருஹ்ய விவிதாந் உபதாவிசேஷாந் ஆதஸ்துஷீம் ரகுகுல உசிதம் ஔபவாஹ்யம் ப்ரத்யுஜ்ஜகாம பவதீம் பரத உபநீதாம்
பாதுகையே! அனைத்துக் கவிகளுக்கும் முதன்மையானவரான வால்மீகி முனிவரின் சிஷ்யரான பரத்வாஜ முனிவர் செய்தது என்ன? காட்டில் கிடைத்த பலவிதமான காணிக்கைப் பொருள்களை எடுத்துக் கொண்டு - பரதனால் அழைத்து வரப்பட்டவளும் , ரகுகுலத்தின் அரசர்கள் மட்டுமே ஏறத் தகுதி உடைய யானையில் அமர்ந்து வந்தவளும் ஆகிய உன்னை எதிர் கொண்டு வணங்கினார்.
ரகுவம்சத்தினர் மட்டுமே ஏறி அமர்வதற்கு உரிமையான யானை மீது பாதுகை கம்பீரமாக அமர்ந்து வந்தாள். ஆக இராமனுக்கு முன்பாகவே பாதுகை அந்நாட்டு யானையின் மீதும் அமர்ந்து செல்லும்படியான பெருமை பெற்றாள்.