Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 130)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
ஆசா: ப்ரஸாதயிதும் அம்ப ததா பவத்யாம் தைவாத் அகாண்ட சரதீவ ஸமுத்திதாயாம் ஸ்தோகாவசேஷ ஸலிலா: ஸஹஸா பபூவு: ஸாகேத யௌவத விலோசந வாரிவாஹா:
தாயே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ அயோத்திக்கு மீண்டும் வந்தாய். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவல்ல சரத் காலம் போன்று நீ வந்தாய். உன்னைக் கண்டவுடன் அயோத்தி நகரத்தில் இருந்த பெண்களின் கண்கள் என்ற மேகங்கள், தங்கள் மழை நீரை நிறுத்தின.
சரத் காலம் என்பது மழை நிற்கும் காலம் ஆகும். சரத் காலமாகிற பாதுகை மீண்டும் வந்தவுடன், பெண்களின் கண்கள் என்னும் மேகங்கள் இராமனைப் பிரிந்து சிந்திய கண்ணீர் என்னும் மழையை நிறுத்தின என்று கருத்து.