Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 129)

Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி

மூர்த்நா முகுந்த பதரக்ஷிணி பிப்ரத: த்வாம் ஆவிர் மதஸ்ய ரகுவீர மதாவளஸ்ய ஆமோதிபி: ஸபதி தாநஜல ப்ரவாஹை: லேபே சிராத் வஸுமதி ருசிரம் விலேபம்

முகுந்தனின் பாதுகையே! அவனது திருவடிகளைக் காப்பாற்றுபவளே! உன்னைத் தன் மீது ஏற்றிக் கொண்ட இராமனின் யானைக்கு மதஜலம் வெகுவாகப் பெருகியது. அந்த மதஜலம் மிகுந்த வாசனையுடன் விளங்கிற்று. அவை பூமி மீது சந்தனம் பூசுவது போன்று விழுந்தன.

பாதுகைகள் யானை மீது அமர்ந்தவுடன், அந்த மகிழ்ச்சியால் யானைக்கு மதநீர் பெருகி நின்றது. அந்த மதநீரானது பூமியில் ஓடியது. இதனைக் காணும்போது சந்தனப் பூசியது போன்று உள்ளது.