Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 128)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
ஸீதா ஸகஸ்ய ஸஹஸா சரணாரவிந்தாத் பக்த்யா நதே க்ருதபதா பரத உத்தமாங்கே ஆருஹ்ய நாகம் அபித: பவதீ விதேநே மாயூர சாமர பரம் மணிரச்மி ஜாலை:
பாதுகையே! சீதைக்கு மிகவும் பிரியமான இராமனின் தாமரை மலர் போன்ற திருவடிகளில் இருந்து, இராமனைப் பக்தியுடன் வணங்கி நின்ற பரதனின் தலையில் விரைவாக ஏறினாய். உன்னைப் பரதன் யானை மீது ஏற்றி அமர்த்தினான். உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக் கற்கள் யானையின் இரு பக்கமும் ஒளி வீச, அதனைக் காணும்போது மயில் தோகை கொண்டு செய்யப்பட்ட சாமரம் வீசுவது போன்று இருந்தது.
யானை மீது பாதுகை பேரரசியாக அமர்ந்தாள். அப்போது அந்தப் பாதுகைகளில் பதிக்கப்பட்ட உயர்ந்த கற்கள் பேறொளி வீசின. இந்த ஒளியானது இரு பக்கங்களிலும் சாமரம் வீசுவது போன்று இருந்தது.