Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 127)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
ரக்ஷார்த்தம் அஸ்ய ஜகத: மணிபாதரக்ஷே ராமஸ்ய பாதகமலம் ஸமயே த்யஜந்த்யா: கிம் துஷ்கரம் தவ விபூதி பரிக்ரஹ: வா கிம் வா விதேஹ துஹிது: க்ருபணா தசா ஸா
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஒரு காலகட்டத்தில் இராமனின் தாமரை போன்ற திருவடிகளை விட்டுப் பிரிந்து ராஜ்ய பாரத்தையும் நீ ஏற்றாய். இந்தச் செயல் அரியதா அல்லது இராமனை விட்டுப் பிரிந்த சீதையின் வருத்தத்துடன் கூடிய நிலை கடினமானதா?
இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு காலகட்டத்தில் சீதையும் இராமனை விட்டுப் பிரிந்தாள்; நீயும் அவனது தாமரை போன்ற திருவடிகளை விட்டுப் பிரிந்தாய். சீதை மிகவும் வருந்தியபடி இருந்தாள். நீயோ - அந்த வருத்தத்துடன் நாட்டை ஆட்சி செலுத்தியபடியும் இருந்தாய். இந்தச் செயல் அல்லவா (சீதையின் செயலைவிட) கடினமானது?