Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 126)

Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி

மந்த்ர அபிஷேக விரஹாத் பஜதா விசுத்திம் ஸம்ஸ்கார வர்ஜ்ஜநவசாத் அபிஸம்ஸ்க்ருதேந மூர்த்நா நிநாய பரத: மணிபாதுகே த்வாம் ராம ஆஜ்ஞயா விநிஹிதம் இவ ராஜ்யலக்ஷ்மீம்

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னை இராமன் பரதனின் தலையில் சூட்டினான். இயல்பாகவே தூய்மையான பரதன் - மந்த்ரங்கள் ஓதுவது, தலையை வாருவது முதலான சடங்குகள் ஏதும் இன்றி தனது தலையில், இராமனின் கட்டளையால் அமர்த்தப்பட்ட உன்னை ராஜ்யலக்ஷ்மி போன்று எழுந்தருளச் செய்தான்.

இந்த உலகில் ஒருவனுக்குப் பட்டம் கட்டுவதற்கு முன்பாக மந்திரங்கள் உரைக்கப்பட்டு, புண்ணிய நீரைத் தெளித்து பின்னரே பட்டம் கட்டுவார்கள். இது சாதாரண அரச பதவிகளுக்கு மட்டுமே ஆகும். உன்னை இராமன் பரதனின் தலையில் சூட்டினான். இயல்பாகவே தூய்மையான பரதன், இது போன்ற சடங்குகள் ஏதும் இன்றி உன்னை ஏற்றான்.