Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 124)

Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி

அப்யுபேத விநிவ்ருத்தி ஸாஹஸா தேவி ரங்கபதி ரத்நபாதுகே அத்யசேத பவதீ மஹீயஸா பாரதந்த்ர்ய விபவேந மைதிலீம்

இரத்தினங்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமனின் திருவடிகளை விட்டுப் பிரிந்து, அயோத்தி செல்வது என்னும் தீரச்செயலுக்கு நீ உடன்பட்டாய். இப்படியாக மிகவும் உயர்ந்த செயலாகிய இராமனின் சொற்படி நடத்தல் என்னும் தன்மையில் சீதையை நீ விஞ்சி நிற்கிறாய்.

இராமன் சீதையிடம் கானகம் வரவேண்டாம் என்று கூறினான். ஆனால் சீதையோ இராமனின் சொல் கேளாமல் கானகம் வந்தாள். பாதுகையிடம் இராமன் அயோத்திக்குத் திரும்புமாறு கூறினான். அதனை உடனே ஏற்ற பாதுகை, பரதனுடன் அயோத்தி வந்தாள். இதன் மூலம் பாதுகை, சீதையை விட மேம்பட்டவள் ஆனாள். அயோத்தி மக்கள் மீது சீதையை விட பாதுகைக்குப் ப்ரியம் அதிகம் எனலாம்.