Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 122)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
ப்ருசாம் ஆதுர ஸஹோதர ப்ரணய கண்டந ஸ்வைரிணா பதேந கிம் அநேந மே வநம் இஹ அவநாத் இச்சதா இதீவ பரிஹாய தந்நிவவ்ருதே ஸ்வயம் யத்புரா பதத்ரம் இதம் ஆத்ரியே த்ருத ஜகத் த்ரயம் ரங்கிண:
இராமன் கானகம் சென்ற வருத்தத்தில் இருந்த பரதன், இராமனிடம் சென்று அவனை மீண்டும் நாட்டிற்குத் திரும்புமாறு அழைத்தான். அப்போது பரதனை இராமன் கண்டித்து, மறுத்து விடுகிறான். இப்படியாக இந்த உலகைக் காப்பாற்றுவதற்காக வந்த இராமன், நாட்டை விட்டுக் கானகம் புகுவதையே பெரிதும் விரும்பியது கண்ட பாதுகை, ”இவன் (இராமன்) திருவடிகளால் நமக்கு ஆவது என்ன?” , என்று மனம் வருந்தினாள். ஆதலால் அந்தத் திருவடிகளை விட்டு, தான் மட்டும் நாட்டிற்கு வந்தாள். மூன்று உலகையும் காக்கும் அந்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளை வணங்கிறேன்.
இராமனின் திருவடிகளை விட்டுப் பாதுகைகள் பிரிந்தமைக்குப் பல காரணங்களைக் கூறுகிறார் - இராமன் பரதனைக் கடிந்து கொண்டது, நாட்டை ஆளவேண்டிய கடமை இருக்கக் கானகம் விரும்பியது - என்ற காரணங்களைக் காட்டுகிறார்.