Sri Paduka Sahasram - Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி (ச்லோகம் 121)
Paththati 5 - ப்ரதிப்ரஸ்தான பத்ததி
ப்ரசஸ்தே ராம பாதாப்யாம் பாதுகே பர்யுபாஸ்மஹே ஆந்ருசம்ஸ்யம் யயோ: ஆஸீத் ஆச்ரிதேஷு அநவக்ரஹம்
இராமனின் திருவடிகளை விட மிகவும் உயர்ந்த அவனுடைய பாதுகையை நாங்கள் த்யானம் செய்கிறோம் - காரணம், அயோத்தி நாட்டின் மீது இராமனுக்கு இல்லாத தயை பாதுகைக்கு இருந்த காரணத்தால் அல்லவா பாதுகை மீண்டும் வந்தாள்?
பரதன் இராமனைப் பலமுறை கெஞ்சியபோதும், அவன் மனம் மாறவில்லை. ஆனால் பாதுகையின் மனம் துடித்தது. தனக்கு மிகவும் ப்ரியமான இராமனின் திருவடிகளை உதறி, பரதனுடன் மக்களின் பொருட்டு மீண்டும் ஓடி வந்தாள். ஆக இராமனோ, அவனது திருவடிகளோ இங்கு உதவவில்லை; பாதுகையே உதவினாள். “அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்” என்று திருநாமத்தின் மேன்மையைப் பிள்ளை லோகாசார்யர் தனது முமுக்ஷுப்படியில் அருளிச்செய்தது ஒப்பு நோக்குக.