Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 120)

Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி

பரதஸ்யேவ மாம் அபி ப்ரசமித விச்வ அபவாத துர்ஜ்ஜாதா சேஷேவ சிரஸி நித்யாம் விஹரது ரகுவீர பாதுகே பவதீ

வீரனாகிய இராமனின் பாதுகையே! 'இராமனைக் கானகம் அனுப்பிய கைகேயின் மகன்' என்ற அபவாதங்கள் பரதன் மீது விழாமல் அவன் காப்பாற்றப்பட்டான் - எப்படி? உன்னைத் தனது தலையில் ஏற்ற காரணத்தினால் ஆகும். இது போன்று எனது தலையிலும் நீ எப்போதும் தங்கி நின்று, எனது அபவாதங்களையும் போக்க வேண்டும்.

எப்படிப்பட்ட த்ருஷ்டிகள், பழிகள் ஆகியவற்றை நீக்கக்கூடிய வல்லமை பாதுகையிடம் உண்டு என்றார்.