Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 119)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
யத் ப்ராத்ரே பரதாய ரங்கபதிநா ராமத்வம் ஆதஸ்துஷா நித்ய உபாஸ்ய நிஜ அங்கிரி நிஷ்க்ரயதயா நிச்சித்ய விச்ராணிதம் யோக க்ஷேம வஹம் ஸமஸ்த ஜகதாம் யத் கீயதே யோகிபி: பாதத்ராணம் இதம் மிதம்பச கதாம் அஹ்நாய மே நிநுதாம்
ஸ்ரீ ரங்கநாதனே இராமனாக அவதரித்து, தனது திருவடிகளுக்குப் பதிலாக, அதனைவிட உயர்ந்த தனது பாதுகைகளை, தனது தம்பியான பரதனிடம் அளித்தான். அந்தப் பாதுகைகளை எப்போதும் உபாஸிக்கும்படி அளித்தான். இந்தப் பாதுகைகள் உள்ளதைக் காப்பாற்றும், இல்லாதவற்றை அளிக்கவும் செய்யும் என்று பெரியோர்களால் கூறப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்தப் பாதுகைகள் எனது அற்பத்தன்மையை நீக்க வேண்டும்.
நமது அற்பமான தன்மைகள் என்ன என்பது நாமே அறியமாட்டோம். அவற்றைப் பாதுகைகள் அறிந்து, அவற்றை நீக்கியும் விடுகிறாள் என்றார்.