Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 118)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
அநந்ய ராஜந்ய நிதேசநிஷ்ட்டாம் சகார ப்ருத்வீம் சதுரர்ணவாந்தாம் ப்ராது: யியாஸோ: பரத: ததா த்வாம் மூர்த்நா வஹந் மூர்த்திமதீம் இவ ஆஜ்ஞாம்
பாதுகையே! இராமன் கானகம் சென்ற பின்னர், அவனது உத்தரவு என்பதே ஒரு வடிவம் எடுத்தது போன்று நீ இருந்தாய். உன்னைத் தனது தலையில் ஏற்றிக் கொண்ட பரதன் செய்தது என்ன? நான்கு கடல்களையும் எல்லையாகக் கொண்ட தனது நாட்டை வேறு யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லாமல், உன்னால் வழி நடத்தப்பட்டு, ஆட்சி செய்தான்.
பாதுகையின் துணையுடன் பரதன் எந்தவிதமான இடையூறுகளும் இன்று, யாருக்கும் அச்சம் கொள்ளாமல், நீதி தவறாத "இராம ராஜ்ஜியம்" அமைத்தான் என்று கருத்து.