Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 116)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
நியதம் அதிருரோஹ த்வாம் அநாதேய சக்திம் நிஜசரண ஸரோஜ சக்திம் ஆதாது காம: ஸ கதம் இதரதா த்வாம் ந்யஸ்ய ராம: விஜஹ்ரே த்ருஷத் உபசித பூமௌ தண்டகாரண்ய பாகே
பாதுகையே! இராமன் உன்னைப் பரதனிடம் அளிப்பதற்கு முன்பு உன் மீது எழுந்தருளி நின்றான். ஏன் தெரியுமா? உன்னிடம் இயற்கையாகவே உள்ள சக்தியைத் தனது தாமரை போன்ற திருவடிகளுக்கு ஏற்றுவதற்காகவே ஆகும். இவ்விதம் அவன் செய்யவில்லை என்றால் உன்னைப் பரதனிடம் அளித்த பின்னர், கற்கள் போன்று கருமையான பாதைகள் நிறைந்து தண்டகாரண்யத்தில் அவன் எவ்விதம் நடந்திருக்க முடியும்? அவன் திருவடிகள் எவ்விதம் தாங்கியிருக்கும்?
பாதுகையிடம் இயல்பாகவே சக்தி உள்ளதால்தான் இராமனால் கானகத்தில் எளிதாக நடக்க முடிந்தது. பாதுகையைப் பரதனிடம் அளிக்கவேண்டிய சூழ்நிலையில், தனது திருவடிகளுக்குப் பாதுகையிடமிருந்து சக்தியைப் பெற இராமன் எண்ணினான். அதனால்தான், அதன் மீது சற்று நேரம் எழுந்தருளிவிட்டு, பின்னர் பரதனிடம் அளித்தான்.