Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 115)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
ப்ரணயிநி பதபத்மே காடம் ஆச்லிஷ்யதி த்வாம் விதிஸுத கதிதம் தத் வைபவம் தே விதந்த: அநுதிநம் ருஷய: த்வாம் அர்ச்சயந்தி அக்ந்ய காரே ரகுபதி பதரக்ஷே ராமகிரி ஆச்ரமஸ்தா:
ரகு குலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ பரதனுடன் செல்லப்போகிறாய் என்று அறிந்த முனிவர்கள் செய்தது என்ன? ப்ரம்மனின் புத்திரரான வசிஷ்டர் மூலம் உனது பெருமைகளை அறிந்தவர்களுக்கும், சித்திர கூட ஆஸ்ரமத்தில் உள்ளவர்களும் ஆகிய முனிவர்கள் தங்கள் தங்கள் இடத்திற்கு உன்னை எழுந்தருளச் செய்து, அக்னி ஹோத்ரம் போன்றவை நடைபெறும்படியாக, யாக சாலைகளில் வைத்து வழிப்பட்டனர். மேலும் பிறந்த வீடு செல்லும் மனைவியைக் கணவன் கட்டி அணைத்து விடை கொடுப்பது போன்று, இராமனின் திருவடிகள் உன்னைக் கட்டி அணைத்தன.
இந்தச் ச்லோகத்திற்கு வேறு விதமாகவும் பொருள் உரைக்கலாம். இராமனின் திருவடிகள் - கணவனானவன் மனைவியை அணைத்துக் கொள்வது போன்று, பாதுகையிடம் மிகவும் ப்ரியமாக இருந்தன. இதனைக் கண்ட முனிவர்கள், "இந்தப் பாதுகையை நாம் வழிபட்டால், நம்மீது இராமனின் திருவடிகள் மிகவும் ப்ரியமாக இருக்கும். இதன் மூலம் இராமனும் நம்மீது அளவற்ற பாசம் கொள்வான்", என்று எண்ணினர். இதனால் பாதுகையை மிகவும் போற்றிக் கொண்டாடினார்கள்.