Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 114)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
இயம் அவிகல யோக க்ஷேம ஸித்யை ப்ரஜாநாம் அலம் இதி பரதேந ப்ரார்த்திதாம் ஆதரேண ரகுபதி: அதிரோஹந் அப்யஷிஞ்சத் ஸ்வயம் த்வாம் சரணநக மணீநாம் சந்த்ரிகா நிர்ஜஜரேண
பாதுகையே! பரதன் இராமனிடம், "உனது பாதுகைகள் மக்களிடம் இல்லாதவற்றை அளிப்பதும் (யோக), இருப்பதைக் காப்பதற்கும் (க்ஷேம) ஏற்றதாகும். ஆகவே அவற்றை என்னிடம் அளிக்கவேண்டும்", என்று யாசித்தான். உடனே இராமன் செய்தது என்ன? உன் மீது ஏறி நின்று, தனது நகங்கள் என்னும் இரத்தினக்கற்கள் ஒளி கொண்டு உனக்குப் பட்டாபிஷேகம் செய்தான் அல்லவா?
ஒருவருக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பாக அபிஷேகம் செய்தல் வேண்டும். இங்கு பாதுகைக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பாக, அதன் மீது தனது திருவடிகளை வைத்து, தனது திருநகத்தின் ஒளி கொண்டு அபிஷேகம் செய்தான்.