Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 113)

Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி

அவிகலம் அதிகர்த்தும் ரக்ஷமே ஸப்தலோக்யா: ரகுபதி சரணேந ந்யஸ்த திவ்ய அநுபாவாம் அபஜத பரத: த்வாம் அஞ்ஜஸா பாதரக்ஷே மணிமகுட நிவேச த்யாக தந்யேந மூர்ந்தா

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பவளே! ஏழு உலகங்களையும் எந்தவிதமான குறையும் இன்றிக் காப்பாற்றும் தகுதியை அடைய பரதன் எண்ணினான். ஆகவே இராமனின் திருவடிகளின் தொடர்பு என்ற பெருமை உடைய உன்னைத் தனது தலையில் ஏற்றான். அவன் தலையில் க்ரீடம் வைக்காமல், நேரடியாகவே உன்னை ஏற்றதனால் பரிசுத்தி அடைந்தான்.

அனைத்தையும் காத்து நிற்கும் இராமனின் திருவடித் தொடர்பு கிட்டப் பெற்ற பாதுகையானது, ஏழு உலகங்களையும் ஆளும் வல்லமையை ஒருவனுக்கு அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை. இதனை அறிந்த காரணத்தினாலேயே பரதன் பாதுகையிடம் தஞ்சம் புகுந்தான்.