Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 112)
Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி
பாதாம் புஜாத் விகளிதாம் பரமஸ்ய பும்ஸ: த்வாம் அதரேண விநிவேச்ய ஜடாகலாபே அங்கீசகார பரத: மணிபாதரக்ஷே கங்காதீரூட சிரஸ: கிரிசஸ்ய காந்திம்
பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மிகவும் உயர்ந்த புருஷனாகிய இராமனிடமிருந்து உன்னைப் பரதன் பெற்றபோது, தாமரை மலர்கள் போன்ற திருவடிகளில் இருந்த உன்னை, மிகவும் அன்புடன் தனது தலையில் ஏற்றான். அப்போது அவன், கங்கையைத் தனது சடையில் வைத்துள்ள காரணத்தால் மேலும் அழகு பெற்ற சிவன் போன்று அழகு பெற்றான்.
எம்பெருமானின் திருவடிகளில் இருந்து கங்கை வெளிப்பட்டது. அந்தக் கங்கையைத் தனது தலையில் சூடியதால் சிவன் அழகு பெற்றார். இங்கு இராமனின் திருவடிகளில் இருந்து பாதுகை பரதனால் பெறப்பட்டது. அதனைத் தலையில் ஏற்றதால் பரதன் அழகு பெற்றான். ஆக எம்பெருமானின் திருவடித் தொடர்பு பெற்றவையுடன் நமக்குத் தொடர்பு உண்டானால், நமது வாழ்வும் மணம் வீசும் என்று கருத்து.