Sri Paduka Sahasram - Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி (ச்லோகம் 111)

Paththati 4 - ஸமர்ப்பண பத்ததி

வாக்யே கரீயஸி பிது: விஹிதே அபி அத்ருப்த்யா மாது: மனோரதம் அசேஷம் அவந்த்யயிஷ்யந் மந்யே ததா ரகுபதி: பரதஸ்ய தேநே மாத: த்வயைவ மணி மௌளி நிவேச லக்ஷ்மீம்

தாயான பாதுகையே! இராமன் தனது தந்தையான தசரதனின் சத்யத்திற்கு இணங்கக் கானகம் சென்றான். இப்படியாகத் தனது தந்தையின் கட்டளையை நிறைவேற்றிய பின்னரும், இராமனுக்குத் த்ருப்தி உண்டாகவில்லை. தனது தாயான கைகேயியின் ஆசைக்கு ஏற்ப பரதனுக்கு முடிசூட்ட எண்ணினான். அதனால் அல்லவோ இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட உன்னைப் பரதன் தலைகளில் சூட்டி அழகு பார்த்தான்?

தசரதனின் சொல்லில் ஒன்றைக் காப்பாற்றியாகி விட்டது. அடுத்த வாக்கான பரத பட்டாபிஷேகம் நிகழ்த்தவேண்டுமே! ஆகையால் மிகவும் தந்திரமாக இராமன் செய்தது என்ன? பரதனின் தலையில், பாதுகைகளை ஏற்றி, பட்டாபிஷேகம் செய்தான்.